

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும் சிறு வணிகர்களுக்கு சுமார் 30 சதவீதம் அளவுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக ரொக்கமற்ற பரிவர்த்தனையில் ஈடுபடும் சிறு வணிகர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும்.
நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்குள் மொத்த வருமானம் இருக்கும் வணிகர்கள், தங்களது கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்காத பட்சத்தில் மொத்த வருமானத்தில் 8 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
தற்போது இந்த விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தும் பட்சத்தில் மொத்த வருமானத்தில் 6 சதவீத தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் பணப் பரிவர்த்தனை யில் ஈடுபடும் வணிகர்கள், நிறு வனங்கள் மொத்த வருமானத்தில் 8 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 2 சதவீத சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 2 சதவீதம் என்பது சிறு வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக சிறுவணிகர்கள், சிறு, குறு தொழிலதிபர்களுக்கு சுமார் 30 சதவீதம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும்.
கையிருப்பில் போதிய பணம்
போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இது முற்றிலும் தவறானது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இப்போ தைய நிலையிலும் ரிசர்வ் வங்கி யிடம் போதுமான பணம் கையிருப் பில் உள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகும் நிலை மையை சமாளிக்கும் திறன் உள்ளது. புதிய ரூபாய் நோட்டு களை அச்சடிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட தாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர் பாக அந்த வங்கியின் தலைவர் விரிவான அறிக்கை சமர்ப்பித்துள் ளார். அதனை ஆய்வு செய்து வருகிறோம்.
வங்கி ஊழியர்கள் முறைகேடு
வங்கி ஊழியர்களின் செயல் பாடுகளை கண்காணிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறி வுறுத்தியுள்ளோம். அதன்படி ஆக்சிஸ் வங்கி மட்டுமல்ல, அனைத்து அரசு, தனியார் துறை வங்கி ஊழியர்களின் செயல் பாடுகளும் கண்காணிக்கப்படும்.
கடைசி நேரத்தில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பல்வேறு தவணைகளில் டெபாசிட் செய்யப் பட்டு வருகிறது. அவை கறுப்புப் பணமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. அத்தியாவசிய தேவை களுக்கு பழைய ரூபாய் நோட்டு களை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தற்போது பழைய ரூபாய் நோட்டு களை வைத்திருப்பவர்கள் வங்கி களில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அப்படியிருக்கும்போது அவர்கள் ஒரே ஒருமுறை மொத்த பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது.
டெபிட் கார்டு அதிகரிப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு டெபிட், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல மொபைல் போன்கள், இணையதளம் மூலமாக மேற் கொள்ளப்படும் பரிவர்த்தனை களும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் சுமார் 15.45 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காலாவதியாகி உள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் 86 சதவீதம் ஆகும்.
எனவே பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க முதல் கட்டமாக 200 கோடி எண்ணிக்கையில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அதன்பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. தேவாஸ் (மத்திய பிரதேசம்), நாசிக் (மகாராஷ்டிரா), சல்போனி (மேற்குவங்கம்), மைசூரு (கர்நாடகா) ஆகிய இடங் களில் உள்ள அரசு அச்சகங் களில் புதிய 500 ரூபாய் நோட் டுகள் அச்சடிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பட்ஜெட் ஆலோசனை
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய் யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை இணை யமைச்சர், துறையின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.