இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை விரைவில் தொடங்கும் டாடா குழுமம்?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: வெகு விரைவில் டாடா குழுமம் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக் கூடத்தை வாங்கும் நோக்கில் அதற்கான பேச்சுவார்த்தையை டாடா மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அது நடந்தால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு பணியில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் ஆகும் டாடா.

அதோடு இதன் மூலம் இந்தியாவை மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசின் நோக்கத்திற்கு பெரிய ஊக்கமாகவும் அமையும். இது தொடர்பாக தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

கர்நாடக மாநிலத்தில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் அமைந்துள்ளது. அதை வாங்கும் முயற்சியில்தான் டாடா தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல். இது தொடர்பாக இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை. மார்ச் இறுதியில் இது உறுதி செய்யப்படும் என தகவல்.

இந்தியாவில் தற்போது வரையில் ஐபோன்களின் பல்வேறு பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டுதான் வருகின்றன. அதனால் டாடா ஐபோன் தயாரிப்பு பணியை மேற்கொண்டால் இந்தியாவில் ஐபோன்களின் விலையும் குறையும் என சொல்லப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in