

சென்னை: தங்கம் விலை ஒரு பவுன் ரூ.312 உயர்ந்து ரூ.42,080-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டுஉயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகிவருகிறது.
கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,992-க்கு விற்பனையானது. மறுநாள் 23-ம் தேதி இது ரூ.40,528 ஆககுறைந்தது. பின்னர், 24-ம் தேதி முதல்27-ம் தேதி வரை ரூ.40,608 முதல் ரூ.40,688 என்ற விலைக்குள் விற்பனையானது.
இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று மீண்டும் அதிகரித்து. சென்னையில் கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.5,260- க்குவிற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.42,080-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,976-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.74.90க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.74,900 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ‘‘பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, சர்வதேச அளவில் கரன்சி மதிப்பும் குறைந்து வருகிறது.
இதனால், தங்க நகையில் முதலீடு செய்வது பாதுகாப்பாக உள்ளதால், சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு இதுவே காரணம். வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.