

எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறு வனத்தில் 3.9 சதவீத பங்குகளை 1,794 கோடிக்கு விற்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடிவெடுத் திருக்கிறது. இந்த பங்குகளை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்க ளாக கேகேஆர் மற்றும் டெமாசெக் ஆகிய நிறுவனங்கள் வாங்குகின் றன. இதற்கு எஸ்பிஐ வங்கியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள் ளது. ஒரு பங்கு ரூ.460 என்னும் அடிப்படையில் 3.9 கோடி பங்குகள் விற்கப்பட்டன.
இரு நிறுவனங்களும் சரி சமமாக 1.95 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து வாங்குகின்றன. இந்த பரிவர்த்தனை மூலம் எஸ்பிஐ லைப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.46,000 கோடியாகும். நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது என எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
எஸ்பிஐ லைப் நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு 74 சதவீதமும், பிஎன்பி பரிபா கார்டிப் நிறுவனத்தின் பங்கு 26 சதவீதமாகவும் முன்பு இருந்தது. 3.9% பங்குகளை விற்க எஸ்பிஐ முடிவு செய்திருப்பதினால் எஸ்பிஐ வசம் 70.1 சதவீத பங்கு இருக்கும்.