

பணமதிப்பு நீக்கம் காரணமாக ஒட்டு மொத்த பிஸ்கட் துறையின் விற்பனை சரிந்திருக்கிறது. இந்தத் துறையின் முக்கிய நிறுவனமான பார்லியின் விற்பனை 1.5 சதவீதம் வரை சரிந்திருக்கிறது.
கடந்த இரு மாதங்களைத் தவிர்த்து பார்த்தால், பிஸ்கட் பிரிவு 5% வளர்ச்சி அடைந்திருந்தது. பருவ மழைக்குப் பிறகு பிஸ்கட் நுகர்வு உயர்ந்தது. ஆனால் பணமதிப்பு நீக்கம் காரணமாக தற்போது கடுமை யாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1.5% அளவுக்கு வளர்ச்சி குறைந் திருப்பதாக பார்லி நிறுவனத்தின் புராடக்ட் பிரிவு தலைவர் மயன்கேஷா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: பண மதிப்பு நீக்கம் கணிசமான பாதிப்பு களை உருவாக்கி இருக்கிறது. நுகர்வோரிடம் பணம் இல்லாத தால் அவர்களின் தேவை குறைந் திருக்கிறது. போதுமான அளவு பணம் சந்தைக்கு வரும் போதுதான் இந்த நிலைமை சரியாகும்.
இதற்கிடையில் மக்களிடம் செல வளிக்கும் போக்கு அல்லது பணம் வழங்கும் முறைகளில் மாற்றம் ஏற் படுத்த நடவடிக்கை எடுத்து வருகி றோம். ஆனால் இதற்கு கால அவ காசம் தேவை. நகர்ப்புறங்களில் தேவை உயர்ந்திருக்கிறது. ஆனால் பருவமழை தாமதத்தால் கிராமப்புற தேவை குறைந்தது. அறுவடைக்குப் பிறகு 2017-ம் ஆண்டு கிராமப்புற தேவை உயரும். இவ்வாறு அவர் கூறினார்.