Published : 08 Jan 2023 06:52 AM
Last Updated : 08 Jan 2023 06:52 AM
புதுடெல்லி: சர்வதேச அளவில் கார்கள் விற்பனையில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 2021 ஆண்டில் சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளன. அமெரிக்கா 1.5 கார்களை விற்பனை செய்து 2-வது இடத்திலும், 44 லட்சம் கார்களை விற்பனை செய்து ஜப்பான் 3-வது இடத்திலும் இருந்தன. ஆனால், 2022 ஆண்டில், ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக 2020-ம் ஆண்டில் கார்கள் விற்பனை 3 லட்சமாக குறைந்தது. அதன்பின் 2022-ல் 42.5 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன. மின்சார கார்களின் விற்பனை ஒப்பிட்டளவில் மிகவும் குறைவாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT