

வீட்டுக்கடன் பிரிவை பலப்படுத்தும் நோக்கத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவ னமான சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை வாங்க பேங்க் ஆப் பரோடா திட்ட மிட்டிருக்கிறது.
ஹவுசிங் பைனான்ஸ் நிறு வனத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வசம் 64 சதவீத பங்கு கள் உள்ளன. ஹட்கோ, யூடிஐ மற்றும் நேஷனல் ஹவுசிங் பேங்க் ஆகிய நிறுவனங்களிடம் மீத முள்ள பங்குகள் இருக்கின்றன. இதற்கான பேச்சு வார்த்தை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், ஆனால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, வீட்டுக்கடன் நிறுவனத் தில் தன் வசம் உள்ள பங்குகளை விற்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதர பங்குதாரர்கள் வசம் உள்ள பங்குகளை வாங்குவ தற்கு பேங்க் ஆப் பரோடா முயற்சி செய்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இரு வங்கிகளும் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டன.
சென்ட் பேங்க் ஹோம் பைனான்ஸ் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது `அப்னா கார் விட்டா நிகாம்’ என்னும் பெயரில் தொடங்கப்பட்டு, பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 64 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.250 கோடி கிடைக்கக் கூடும் என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வின் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாராக் கடன் அதிகம் உள்ள வங்கிகள், பிரதான தொழில்களில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. அதனால் வீட்டுக் கடன் பிரிவில் இருந்து வெளியேற சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா திட்ட மிட்டிருக்கிறது.