Published : 24 Dec 2016 11:07 AM
Last Updated : 24 Dec 2016 11:07 AM

இவரைத் தெரியுமா?- விஆர்வி ஸ்ரீபிரசாத்

உலகின் மிகப் பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனமான வால்வோ பஸ் நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் வால்வோ பஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர். 2014-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2008-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை டெய்ம்லர் வர்த்தக வாகனங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவுக்கு துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2008-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை டெய்ம்லர் ஹீரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் நெட்வொர்க் பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியவர்.

1986-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் சந்தைப் பிரிவில் மேலாளராக பணியாற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x