பசுமை எரிசக்தியில் முகேஷ் அம்பானி ஆர்வம்

முகேஷ் அம்பானி | கோப்புப்படம்
முகேஷ் அம்பானி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ரிலையன்ஸ் குழுமத்தில் இதர வர்த்தக பிரிவுகளிலும் தனது வாரிசுகள் பொறுப்பேற்ற பிறகு பசுமை எரிசக்தி திட்டங்களில் முகேஷ் அம்பானி அதிக ஆர்வம் காட்டவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

65 வயதான முகேஷ் அம்பானி பசுமை எரிசக்தி திட்டங்களை தமது குழுமத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்த முனைப்பு காட்டி வருகிறார். இதனை உணர்த்தும் விதமாகவே, பசுமை எரிசக்தி திட்டங்களுக்காக அடுத்த 15 ஆண்டுகளில் 7,500 கோடி டாலரை (ரூ.6 லட்சம் கோடி) செலவிட உள்ளதாக அம்பானி கடந்த ஆண்டு தெரிவித்தார்.

மின் வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிப்பு, ஹைட்ரஜன் தயாரிப்பு உள்ளிட்ட பசுமை கட்டமைப்புகளை உருவாக்க முதலீட்டாளர்களுடன் பேசி வருவதாக அம்பானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in