Last Updated : 18 Dec, 2016 12:52 PM

 

Published : 18 Dec 2016 12:52 PM
Last Updated : 18 Dec 2016 12:52 PM

2017 ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் எப்போது வேண்டுமானாலும் ஜிஎஸ்டி அறிமுகமாகலாம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் இன்னமும் சில சிக்கல்கள் நிலவு கின்றன. இதனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாவது சிரமம் என்று தோன்று கிறது. இதனால் அடுத்த நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 16-ம் தேதித்குள் எப்போது வேண்டுமானாலும் ஜிஎஸ்டி அறிமுகம் ஆகலாம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். ஃபிக்கி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:

ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை 10 பிரச்சினைகளுக்குத் தீர்வு கண் டுள்ளது. இன்னும் ஒரே ஒரு பிரச்சினைதான் அதாவது வரி நிர்வாகத்தை எப்படி மேற்கொள் வது என்பது மட்டும் நிலுவையில் உள்ளது. இது தீர்க்கப்பட்டுவிட்டால் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் பிரச் சினை இருக்காது.

பரிவர்த்தனை வரி விதிப்பை எப்போது வேண்டுமானாலும் கணக் கிட முடியும். இதனால் ஏப்ரல் 1-ம் தேதிதான் அமல்படுத்த வேண்டும் என்பதில்லை. செப்டம்பர் 16-ம் தேதிக்குள் இதை அமல்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் மறைமுக வரிவிதிப்பு அரசியல் சாசனப்படி காலாவதியாகிவிடும். செப்டம்பர் 16-ம் தேதிக்குள் அறி முகமாகாவிடில், வரி விதிக்க முடியாத சூழல் உருவாகிவிடும் என்ற சட்ட சிக்கலையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு மசோதா அரசியல் சாசனப்படி கடந்த ஆகஸ்டில் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக பாதிக்கும் மேலான சட்டப் பேரவைகளில் தீர்மானம் போடப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி கவுன்சில் கூடி விவாதித்து அதன டிப்படையில் மாற்றங்கள் செய் யப்பட்டு வருகின்றன. இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. அவையும் விரைவில் தீர்க்கப்பட்டு விடும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கொண்டு வந்த 10 திருத்தங்கள் ஜிஎஸ்டி மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இதை அமல்படுத்துவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்றே தோன்றுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் அடுத்தடுத்து நடை பெற உள்ளதால் மசோதாவில் திருத்தங்கள் செய்து அதை நிறை வேற்ற முடியும் என்றார்.

ஒரு முனை வரி விதிப்பான ஜிஎஸ்டி, அதிகார கட்டுப்பாடுகளை தளர்த்தும் மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வரி வரு வாயை பகிர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்கும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது குறுகிய காலத்தில் சில சிரமங்களை அளித் தாலும் நீண்ட காலத்தில் இது மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்றார் ஜேட்லி.

டிஜிட்டல் கரன்சி

மதிப்பு நீக்கம் செய்யப்ட்ட உயர் மதிப்பு நோட்டுகளான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு இணையான மதிப்புக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என்று ஜேட்லி கூறினார். பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 15.44 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே அளவுக்கு புதிய நோட்டுகள் வெளியிடப்படாது. பற்றாக்குறையை டிஜிட்டல் கரன்சி மூலம் சமாளிக்க வேண்டும் என்று ஜேட்லி கூறினார்.

மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது மிகவும் தைரியமான நடவடிக்கை. இத்தகைய சோதனை முயற்சிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். இப்புதிய முயற்சியானது இந்தியாவின் பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும். கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்த ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் இனி மாறும். கறுப்புப் பணம் ஒழியும், வரி ஏய்ப்பு தடுக்கப்படும். தீவிரவாத குழுக்களுக்கு பணம் செல்வது தடுக்கப்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார். நாட்டில் 75 கோடி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. இது தவிர இ-வாலட் உள்ளிட்ட மின்னணு பண பரிமாற்ற வசதிகள் உள்ளன. இந்நிலையில் இத்தகைய மாற்றத்தை எளிதில் சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு இந்த அறிவிப்பு வெளியிடும் போது 1,716 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி ரூ. 1,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x