பங்குச்சந்தை | சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 54 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயர்ந்து 60,712 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20 புள்ளிகள்(0.11 சதவீதம்) உயர்ந்து 18,050 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்த நேரத்தில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் உயர்ந்து 60,718.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் உயர்ந்து 18,045.30 ஆக இருந்தது.

உலக அளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய சரிவில் இருந்து சற்று மீண்டு இன்று லாபத்தில் தொடங்கின. இருந்த போதிலும் வர்த்தக நேரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஐடிசி, என்டிபிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், கோடாக் மகேந்திரா, டாடா ஸ்டீல், விப்ரோ பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in