

வரவிருக்கும் 2017-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.6 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கட்டமைப்பு சீர்திருத்தங்களால் உற்பத்தி துறை வலுவாக இருப்பது முதலீடுகள் வர ஆரம்பித்தது போன்ற காரணங் களால் இந்தியா 2017-ம் ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆசிய மற்றும் பசிபிக் நாடு களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கமிஷன், ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவும் சீனாவும் ஆசிய பசிபிக் பிராந்தி யத்தில் நிலையான வளர்ச்சி யடைந்து வருகிறது. 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரு நிதியாண்டுகளிலும் இந்திய பொருளாதாரம் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் கொண்டுவரப்பட உள்ள கட்டமைப்பு சீர்திருத் தங்களும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி குறைவாக இருந்த போதிலும் மீண்டும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.
தற்போது பருவமழை சீராக இருப்பது மற்றும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி யிருப்பது ஆகிய காரணங்கள் நுகர்வை அதிகமாக்கும். இதன் காரணமாக வளர்ச்சி ஏற்படும்.
2017-ம் ஆண்டில் சீனாவை பொறுத்தவரை வளார்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கும். நுகர்வு அதிகரிப்பது, சேவைத்துறை வளர்ச்சி ஆகிய காரணங்களால் இந்த வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகளின் பொரு ளாதாரம் மீளக்கூடிய காலத்தை இழந்துகொண்டிருக்கிறது. சீனா மற்றும் இந்தியா ஆகிய வற்றால்தான் இந்த பிராந்தியத் தின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி யடைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.