

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.67,500 கோடியாக (1,000 கோடி டாலர்) அதிகரிக்கும் என சிட்டி குரூப் தெரிவித்துள்ளது.
சரக்குகள் பிரிவில் வர்த்தகப் பற்றாக் குறை அதிகரித்து வருகிறது. அதேபோல மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ரெமிட்டன்ஸ் குறைந்து வரும் சூழலில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.67,500 கோடியாக (1,000 கோடி டாலர்) அதிகரிக்கும் என சிட்டி குரூப் கூறியிருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 340 கோடி டாலராக (சுமார் ரூ. 23,000 கோடி) இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தை விட 30 கோடி டாலர் (சுமார் ரூ. 2,024 கோடி) அதிகமாகும். பண மதிப்பு நீக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு அதிகம் வெளியே செல்வதற்கு வாய்ப்பு இல்லை என சிட்டி குரூப் கணித்திருக்கிறது.