

* இந்தியாவின் மிகவும் பிரபலமான முன்னணி ஃபேஷன் டிசைனர். ஏஎன்டி டிசைன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர்.
* 12 வயதிலேயே ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்று தீர்மானித்தவர்.
* மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி. ஃபேஷன் மையத்தில் ஃபேஷன் டிசைன் பயிற்சி முடித்தவர். 12 ஆண்டுகள் மும்பையில் உள்ள பிரபல ஆடையகங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து அளித்துள்ளார்.
* 1998-ல் ஏஎன்டி டிசைன் நிறுவனத்தை சகோதரி மீரா செஹ்ரா மற்றும் சகோதரர் முகேஷ் சலானி உதவியுடன் தொடங்கினார். 300 சதுர அடியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 550 கிளைகளுடன் செயல்படுகிறது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 300 கோடி.
* பார்ச்சூன், போர்ப்ஸ் ஆகிய இதழ்களில் மிகவும் அதிகாரமிக்க தொழில் முனைவோராக அடையாளம் காணப்பட்டவர்.
* லக்மே ஃபேஷன் வீக் 2014-க்கான நிர்வாகக் குழுவின் ஆலோசகராக உள்ளார்.
* உயர்ரக டிசைன் ஆடைகளை நடுத்தர பிரிவினரும் வாங்கும் வகையில் வடிவமைத்து விற்பதே இவரது நோக்கம்.