

டாடா ஸ்டீல் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான நுஸ்லி வாடியா நீக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தில் 37 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாடியாவை இயக்குநர் குழுவி லிருந்து நீக்குவதற்காக கூட்டப் பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத் தில் 90.8 சதவீத பங்குதாரர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த கூட்டங்களில் வாடியா கலந்து கொள்ளவில்லை. முன்னதாக டாடா மோட்டார்ஸ் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
டாடா அறக்கட்டளையிலிருந்து ஆர். வெங்கடரமணன், டாடா இன்வெஸ்ட்மெண்ட் பொதுமேலா ளர் மெஹ்ரப் இரானி உள்ளிட்டு 60 க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
டாடா சன்ஸ் செயல்பாடுகள் குறித்தும், தன் மீதான குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித் தும் வாடியா பங்குதாரர்களுக்கு கடந்த வாரத்தில் கடிதம் எழுதி யிருந்தார். முறைகேடாகவும், வெட்கப்படும்படியாகவும் நிறு வனத்தை வாடியா வழிநடத்தினார் என்று வாடியா மீது டாடா சன்ஸ் குற்றம் சுமத்தியிருந்தது. இதனிடையே டாடா குழுமம் மற்றும் ரத்தன் டாடா மீது வாடியா மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.