Published : 24 Dec 2016 10:47 AM
Last Updated : 24 Dec 2016 10:47 AM

வரைவு ஜிஎஸ்டி மசோதா மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

மாநில அரசுகள் வரைவு ஜிஎஸ்டி மசோதாவை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 7-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளார்களிடம், ``இந்திய நிதியமைச்சகம் மற்றும் மாநில நிதி அதிகாரிகள் தேசிய விற்பனை வரியின் வரைவை ஏற்றுக் கொண்டனர். சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தவிர அனை வராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து வருகிற ஜனவரி 3-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டமும் இரு நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஜிஎஸ்டி கொண்டுவரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ``நான் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை கொடுக்க முயற்சி செய்து வருகிறேன். விரைவாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் முயற்சி செய்து வருகிறோம்,’’ என்று ஜேட்லி தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் மத்திய அரசும் மாநில அரசு பிரதி நிதிகளும் இழப்பீடு சட்ட விதிமுறை களை ஒப்புக் கொண்டுள்ளனர். அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இது பற்றிய இறுதி கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜிஎஸ்டி வரியால் மாநிலங் களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் முதல் ஐந்து வருடங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா வழிவகை செய்கிறது. இதற்கு மாநிலத்தின் வருவாயை கணக்கிட அடிப்படை வருடமாக 2015-16ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் தவிர்க்க தனியான சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் வரைவு மத்திய ஜிஎஸ்டி மசோதா குறித்து ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கூட்டத்தில் ஐஜிஎஸ்டி என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்யப் படவில்லை. இது பற்றி அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x