

பிளிப்கார்ட் தளத்தில் டெல்லி வாசிகள் அதிகம் ஷாப்பிங் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. டெல்லியை தொடர்ந்து பெங்களூரு, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருப்பவர்கள் பிளிப்கார்ட் தளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மூன்றாம் கட்ட நகரங்களில் வேலூர், திருப்பதி, பெல்லாரி, ஜோர்கட் மற்றும் கோட்டயம் ஆகிய நகரங்களில் இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். 2016-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியவர்களில் 60 சதவீதம் ஆண்கள் ஆவார்கள். எலெக்ட்ரானிக்ஸ், காலணி, லைப்ஸ்டைல் பொருட்களை ஆண்கள் அதிகம் வாங்கி இருக்கிறார்கள்.
தவிர 2016-ம் ஆண்டில் எரிசக்தி சேமிக்கும் பல்ப், செல்பி எடுக்க பயன்படுத்தும் குச்சி, இரத்த அழுத்தக் கருவி, பிரிண்டர் இங்க் மற்றும் ஆணுறை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்திருந்ததாக பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.