Published : 28 Dec 2022 03:10 PM
Last Updated : 28 Dec 2022 03:10 PM

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் ரத்தன் டாடா | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ரத்தன் டாடா | கோப்புப்படம்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்திய தொழிலாதிபருமான ரத்தன் டாடாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 85. தலைமுறை தலைமுறையாக தொழில் செய்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் தனது தன்னிச்சையான செயல்களால் கவனம் ஈர்ப்பவர்.

ரத்தன் டாடா சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார். 2016 முதல் 2017 வரையில் சுமார் ஆறு மாத காலம் இடைக்கால தலைவராகவும் இருந்தார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள், நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் குறித்த ஐந்து தகவல்கள்:

  • டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளு பேரன்தான் ரத்தன் டாடா. கடந்த 1937, டிசம்பர் 28-ம் தேதி அன்று மும்பையில் நேவல் டாடா மற்றும் சூனிடாடாவுக்கு மகனாகப் பிறந்தார்.
  • அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலையில் பட்டம் முடித்தவர். மேலாண்மை சார்ந்த படிப்பை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் முடித்தவர்.
  • கடந்த 1962-ல் டாடா குழுமத்தில் அசிஸ்டன்ட்டாக பணிக்கு சேர்ந்தார். பின்னர் 1991 வாக்கில் ஜேஆர்டி டாடாவுக்கு பிறகு டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • அதன் பின்னர் டாடா குழுமத்தின் சீரிய வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். ஆட்டோமொபைல், ஸ்டீல்ஸ், டாடா தேநீர் என அனைத்திலும் அந்நிறுவனம் வளர்ச்சி பெற்றது. டாடா நானோ மற்றும் டாடா இண்டிகா போன்ற கார்களின் வணிக விரிவாக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • இந்திய பணக்காரர்களில் அவர் தற்போது 421-வது இடத்தில் இருப்பதாக IIFL Wealth Hurun India Rich List 2022 தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x