

திராட்சை உள்ளிட்ட பழத் தோட்டங்களில் பறவைகளால் விவசாயிகளுக்கு பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, தோட்டங்களில் உள்ள பழங்களை பறவைகள் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பறவைத் தடுப்பு வலைகளை விவசாயிகள் பயன்படுத்தலாம் என தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் திராட்சைத் தோட்டங்களில் பறவைத் தடுப்பு வலைகள் அமைக்க தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆலங்கட்டி மழை பெய்யும்போது ஏற்படும் பாதிப்புகளையும் இந்த பறவைத் தடுப்பு வலைகளைக் கொண்டு தடுக்கலாம்.