விற்பனையகத்துக்கு வருவோர் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்தது: மெர்சிடஸ் பென்ஸ் தகவல்

விற்பனையகத்துக்கு வருவோர் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்தது: மெர்சிடஸ் பென்ஸ் தகவல்
Updated on
1 min read

பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டதால் விற்பனையகங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 60% குறைந்திருப்பதாக மெர்சிடஸ் பென்ஸ் தெரிவித்திருக்கிறது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் எங்கள் காரை வாங்கும் தகுதி படைத்தவர்கள் கொஞ்சம் பணம் இழந்திருக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ரோலண்ட் போல்கர் தெரிவித்தார்.

எவ்வளவு விற்பனை குறைந் திருக்கும் என்னும் தகவல் இப்போ தைக்கு வெளியிட முடியாது. அடுத்து ஒரிரு மாதங்களில் நிலைமை சீராகும். இப்போது கார் வாங்க திட்டமிடுபவர்கள் சில மாதங்களுக்கு பிறகு வாங்குவார்கள்.

ரொக்கப்பணம் மூலம் வாங்கு பவர்களை நாங்கள் ஊக்குவிக்க வில்லை. நவம்பர் 8-ம் தேதி பை நிறைய பணம் கொண்டு வந்திருந் தாலும், கார் விற்பனை செய்ய வேண்டாம் என எங்கள் விற்பனை யாளர்களிடம் ஏற்கெனவே தெரி வித்துவிட்டோம். அரசின் நடவடிக் கையை நாங்கள் வரவேற்கிறோம்.

எங்கள் நிறுவனத்தின் 99% கார்கள் கடன் மூலமாகவே வழங் கப்படுகின்றன. மிகச்சில கார்களே ரொக்க பரிவர்த்தனையில் விற்பனையாகின்றன.

2016-ம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி நிர்ணயம் செய் திருந்தோம். ஆனால் தலைநகர் பகுதியில் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் 9 மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டது. அத னால் இந்த ஆண்டு விற்பனையில் பெரிய அளவுக்கு வளர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விற்பனையை விட குறைவாக கூட விற்பனை இருக்க கூடும் என போல்கர் கூறினார். வட கிழக்கு மாநிலங்களில் முதல் விற்பனையகத்தை குவகாத்தியில் தொடங்கி வைத்தபோது செய்தி யாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in