Last Updated : 10 Dec, 2016 10:51 AM

 

Published : 10 Dec 2016 10:51 AM
Last Updated : 10 Dec 2016 10:51 AM

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப 85% ஏடிஎம்-கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன: இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, நவம்பர் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந் திரங்களில் சுமார் 85% இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்தார். புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந் திரங்களை மாற்றியமைத்துள்ள துடன், மைக்ரோ ஏடிஎம் இயந்திரங் களை கிராமப்புற பகுதிகளில் அமைக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ள தாகவும் மக்களவையில் நேற்று குறிப்பிட்டார். எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் கூறியுள்ளதாவது:

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,11,594 வங்கி ஏடிஎம் மையங்களும், 14,324 வங்கியல்லாத தனியார் ஏடிஎம் மையங்களும் இயங்கி வந்தன. இதில் 1,79,614 ஏடிஎம் இயந்திரங்கள் நவம்பர் 30-ம் தேதி வரையில் புதிய நோட்டுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தவிர கிராமப்புற பகுதிகள் உள்ளிட்ட துணை சேவை பகுதிகளில் மைக்ரோ ஏடிஎம் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி வரையில் 1,14,036 மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைப்பதற்கு மாநில கிராமப்புற வங்கிகள் தவிர்த்த இதர வர்த்தக வங்கிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன என்று கூறினார்.

ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ஆகும் செலவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூம் ராம் மேகவால், வெவ்வேறு அச்சகங்களுக்கும் ஏற்ப தொகை அளிக்கப்படுகிறது என்றார்.

அந்தந்த அச்சக இயந்திரங்களின் காலம், அச்சக திறன், மனித உழைப்பு மற்றும் இயந்திரங்களின் பணி இவற்றின் அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்றும், இதற்கான தொகையை அவ்வப்போது ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கிறது என்றும் மேகவால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x