ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு

ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.40,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.2.20 அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது. பின்னர், படிப்படியாக குறைந்து ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.39 ஆயிரத்துக்கு இடையே விற்பனையாகி வந்தது. இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாதம் 12-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.40,360 ஆக அதிகரித்தது. பின்னர், 14-ம் தேதி ரூ.40,800 ஆக அதிகரித்தது.

பின்னர், 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.40,360 ஆக குறைந்தது. பிறகு மீண்டும் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,115- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.40,920-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,136க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.74,700 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.2.20 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in