

தற்போது உள்ள சூழலை பயன் படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கு வதை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கு இருநாடுகளுக்கு இடையே உள்ள தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தோ-அமெரிக் கன் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப் பின் தேசியத் தலைவர் என்.வி.னி வாசன் கூறியதாவது: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் நிர்வாகத்தோடு இணைந்து இந்திய அரசு இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பிரச் சினைகள், விசா பிரச்சினைகள், இரு நிறுவனங்களுக்கு இடையேயான சச்சரவு தொடர்பான பிரச்சினை களுக்கு இந்திய அரசு டிரம்ப் நிர் வாகத்தோடு இணைந்து விரைவாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்றார்.