

புதுடெல்லி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழில்முனைவோருக்கும், அவர்களின் திறன் மேம்பாட் டுக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதன் விளைவாக 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 80,000-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இவற்றின் இன்றைய மதிப்பு ரூ.27.39 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். மத்திய அரசு அறிமுகப்படுத்திய விளையாட்டு தொடர்பான திட்டங்களால் இன்றைய இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் துறைகளில் அதிக திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக, பாராலிம்பிக்கில் இந்திய வீரர் கள் 19 பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த் துள்ளனர். அதேபோன்று, பெண்கள் ஹாக்கி அணியும் மீண்டுமொருமுறை கோப்பையை வென்று பெருமையை நிலைநாட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.