

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம்) நிறுவனத்தின் ஒரு சதவீத பங்கு களை ரூ.325 கோடிக்கு விற்றிருக்கிறார். இந்த தொகையை பேடிஎம் பேமென்ட் வங்கி செயல்பாட்டுக்கு முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேடிஎம் பேமென்ட் வங்கியில் விஜய் சேகர் ஷர்மா 51 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.
இந்த ஒரு சதவீத பங்குகளை ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்களே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் யார் என்னும் விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 21 சதவீத பங்குகளை விஜய் சேகர் ஷர்மா வைத்திருந்தார். ஒரு சதவீத பங்குகள் விற்றிருப்பதால் 20 சதவீத பங்குகள் அவர் வசம் இருக்கிறது.
பேமென்ட் வங்கி தொடங்கு வதற்கு 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. விஜய் சேகர் ஷர்மாவுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.