Published : 21 Dec 2022 04:27 AM
Last Updated : 21 Dec 2022 04:27 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் மகசூல் குறைந்த நிலையில், கொள்முதல் விலை கிலோ ரூ.20 ஆக சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்அதிகமான விவசாயிகள் தென்னைவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இரு மாதங்களுக்கு ஒருமுறை தென்னை மகசூல் நடைபெறும்.
தேங்காய் கிலோ ரூ.30-க்குமேல் விலை போனால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும். இந்நிலையில் தற்போது மகசூல் குறைந்து விட்டதால் தென்னைக்கு 10 தேங்காய் கிடைப்பதே அபூர்வமாக உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.22-க்கு விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆககுறைந்துள்ளது.
மேலும், இதற்கு முன்பு1,000 தேங்காய்கள் கிடைத்த தென்னந்தோப்பில் இருந்துதற்போது 500 தேங்காய்கள்கூட கிடைப்பதில்லை. இந்நிலையில் விலையும் சரிந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தோப்பைகிளறி உரமிடுதல் உள்ளிட்டபராமரிப்புகளை மேற்கொள்ளாமல், கிடைத்தது போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே கன்னியாகுமரிமாவட்டத்தில் உள்ள தேங்காய்களுக்கு எப்போதும் வரவேற்புஉண்டு. உணவுக்கு மட்டுமின்றிஎண்ணெய், கொப்பரை, இளநீருக்கு ஏற்றதரம் இங்குள்ள தென்னைகளில் இருப்பதாகஅனைத்து தரப்பினராலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம் பாதிப்பு: இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பல டன் தேங்காய்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகின்றன. இதனால் இங்குள்ள தேங்காய்களை உள்ளூர் தேவைக்கு போக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாககிலோ ரூ.22-க்கு மேல் தேங்காய்விலை உயரவில்லை. வரும்கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு தேங்காய்விலை உயரும் என எதிர்பார்க்கிறோம். அப்படியில்லாமல் இதேநிலை நீடித்தால் தென்னை விவசாயம் குமரியில் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT