சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது.வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை சரிந்து 61,437 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி104 புள்ளிகள் சரிந்து 18,317 ஆக இருந்தது.

காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 586.29 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,219.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 182.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,238.05 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவில் தொடங்கின. வங்கிப்பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகை பங்குகளும் வீழ்ச்சியையே காட்டின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, இன்டஸ்இந்து பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மாருது சுசூகி, விப்ரோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in