

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷ் யூரன்ஸ் விரைவில் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) இருப்பதாக அதன் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததில் இருந்து ஆறு மாதங்களுக்குள் பொதுப்பங்கு வெளியீடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: நிறுவனத்தின் பொதுப்பங்குக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதன் பரிந் துரை மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. அரசின் அனுமதிக்கு பிறகு ஐபிஓ வெளியிடப்படும். இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் மத்திய அரசு வசம் இருக்கிறது. 28 நாடுகளில் செயல்பட்டு வருகி றோம். நடப்பு நிதி ஆண்டில் 20 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஹெல்த் பாலிசிகளில் வரிச் சலுகையை உயர்த்தும் பட்சத்தில் மேலும் அதிக மக்கள் இந்த பாலிசியை எடுப்பார்கள். பண மதிப்பு நீக்கம் காரணமாக ஆரம் பத்தில் பிரீமியம் வசூல் செய்வதில் சில பிரச்சினைகள் இருந்தது. இப்போது பிரச்சினைகள் ஏதும் இல்லை என குறிப்பிட்டார்.