கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்செக்ஸ்130 புள்ளிகள் உயர்வு

Published on

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கங்களின்றி தொடங்கியது. இருந்தபோதிலும் வர்த்த நேரத்தின் போது சென்செக்ஸ் 130 புள்ளிகள் வரை உயர்வடைந்து 61,468 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் உயர்வடைந்து 18,302 ஆக இருந்தது.

காலை 09:46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.95 புள்ளிகள் உயர்ந்து 61468.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.50 புள்ளிகள் உயர்ந்து 18,302.50 ஆக இருந்தது.

உலகளாவிய பணவீக்கம் காரணமாக அதிகரித்த வட்டி விகிதங்களின் காரணமாக கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டு நாட்களில் வீழ்ச்சி கண்டிருந்தன. இருந்தபோதிலும் திங்கள் கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கம் இன்றியே தொடங்கியது. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வடைந்து சாதகமான போக்கை காட்டின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை பவர் கிர்டு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, கோடாக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டிசிஎஸ், விப்ரோ, எல் அண்ட் டி, இந்து இன்டஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ் சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in