பங்கு சந்தைகளின் 2 நாள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.78 லட்சம் கோடி நஷ்டம்

பங்கு சந்தைகளின் 2 நாள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.78 லட்சம் கோடி நஷ்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: பங்குச் சந்தையில் 2 நாட்களாக சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5.78 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய அளவில் ஏற்ற இறக்க மின்றி வர்த்தகம் நடைபெற்றது. இந்த மாதத்தின் முதல் வாரத் தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 461 புள்ளிகள் சரிந்து 61,338-ல் நிலை பெற்றது. வியாழக்கிழமை 879 புள்ளிகள் சரிந்தது. ஆக 2 நாட்களில் மட்டும் 1,340 (2.13%) புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிப்டியும் இரண்டு நாட்களில் 2 சதவீதத்துக்கு மேல் சரிவை சந்தித்தது. இந்த 2 நாள் சரிவின் காரணமாக முதலீட் டாளர்களுக்கு ரூ.5,78,648 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் தலைவர் வினோத் நாயர் கூறும்போது, “சர்வதேச அளவில் பண வீக்கம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய யூனியனின் மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி ஆகியவை வட்டி விகிதங்களை 0.5% உயர்த்தின. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகளிலும் அது எதிரொலித்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in