

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார் நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் விற்பனை செய்யும் அந்த நிறுவன கார்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
எவ்வளவு உயர்த்துவது என்பது இன்னும் முடிவு செய்யப் படவில்லை. 1.5 சதவீதம் வரை 3 சதவீதம் வரை உயர்த்த திட்ட மிட்டிருக்கிறோம். ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் சஹானி தெரி வித்திருக்கிறார். மேலும், கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் ஸ்டீல் விலை அதிகரித்து வரு கிறது. இந்த விலை ஏற்றம் எங்களைப் பாதித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரிக்கும் முடிவைத் தள்ளிவைத்தோம். ஆனால் இப் போது முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதிய விலை எங்களுடைய அனைத்து கார் களிலும் எதிரொலிக்கும் என்றார்.
கடந்த வாரம் டொயோடோ கிர் லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் 3 சதவீத விலை உயர்வை அறி வித்தது. மூலப்பொருள் விலை ஏற்றம் மற்றும் அந்நிய செலாவணி மாற்றம் ஆகிய காரணங்களால விலையை அதிகரிப்பதாக அந்த நிறுவனம் கூறியது.