எல்லை மோதலுக்கு பிறகு சீன பொருட்களை தவிர்க்கும் இந்தியர்கள்

எல்லை மோதலுக்கு பிறகு சீன பொருட்களை தவிர்க்கும் இந்தியர்கள்
Updated on
2 min read

புதுடெல்லி: கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனத் துருப்புகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்களும், 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் சீன பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தொடர் பாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், சீனப் பொருட்களை இந்தியாவில் 10-ல் 6 இந்தியர்கள் தவிர்த்து விடுவதாகத் தெரிய வந்துள்ளது.

சீனாவில் தயாராகும் பொருட்களுக்குப் பதிலாக 11 சதவீதம் பேர்தரமான இந்தியப் பொருட்களையும், 8 சதவீதம் பேர் வெளிநாட்டுப் பொருட்களையும் வாங்கி வருவதாகத் தெரிய வந்துள்ளது. குறைந்த விலை, தரம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட காரணிகளையும் கொண்டு வேறு பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் சீனாவில்தயாரான பொருட்கள் சந்தைகளிலும், கடைகளிலும், ஆன்-லைனிலும் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

இதற்கு 2020-ல் எல்லையில் சீன துருப்புகளுடன் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்ல ப்பட்டதும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் அத்துமீறலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் சீன தயாரிப்புகளை புறக்கணித்து அதற்குபதிலாக "ஆத்மநிர்பார் பாரத்"பதாகையின் கீழ் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் உணர்வு அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு பண்டிகைக் கால ஷாப்பிங்கின் போது பார்த்தால், ஆடைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற சில துறைகளில் மட்டும் விலைக்கு பதிலாக தரத்தை தீர்மானிக்கும் காரணியாக இருந்தாலும், சீனப் பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2021, 2022-ல் 11 சதவீதம்பேர் சீன பைகள், ஆடைகள், உதிரிபாகங்களை வாங்கியவர்கள் தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் சீனவாகன உதிரி பாகங்கள் வாங்கியவர்கள் தற்போது 7 சதவீதம் பேர்கடந்த ஓராண்டாக எதையும் வாங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

எனினும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீனப் பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. பண்டிகை காலத் தேவை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சீன பொம்மைகள், எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருவதாகவும் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்து லோக்கல் சர்க் கிள்ஸ் அமைப்பின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறும்போது, ‘‘தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து கொண்டிருக் கும் பல இந்திய வணிக நிறுவனங் கள், அதற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்வதைக் கருத்தில் கொண்டுள்ளன.

மேக் இன் இந்தியா: மேலும் உற்பத்தியை ஊக்குவிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க விரும்புகிறது. ஏற்கெனவே பலமேக் இன் இந்தியா நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பொருட்கள் போட்டியுடன் கூடிய துறைகளில் இறக்குமதி மற்றும் விற்பனையை ஊக்குவிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் நல்ல செய்தி என்னவென்றால், மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மேட் இன் சீனா பொருட்களைவிட சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் 1 இந்தியர் நம்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in