

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 461 புள்ளிகள் (0.75 சதவீதம்) சரிந்து 61,337 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 145 புள்ளிகள்( 0.79 சதவீதம்) சரிந்து 18,269 ஆக இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 117.56 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,681.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,396.85 ஆக இருந்தது.
உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பால் மோசமான சந்தை போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 461.22 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,337.81 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி145.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து18269.00 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்திருந்தது. எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, பஜார்ஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜார்ஜ் ஃபின்சர்வ், ஐடிசி, இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ். அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி அடைந்திருந்ததது.