

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 61,480 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,350 ஆக இருந்தது.
காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 117.56 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,681.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,396.85 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் மோசமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தனது வார இறுதிநாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடக்கியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண் டி, பவர் கிர்டு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், நெட்ஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஆக்சிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் உயர்வில் இருந்தது. மறுபுறம் பஜார்ஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜார்ஜ் பின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் போன்ற பங்குகள் வீழ்ச்சியில் இருந்தன.