

புதுடெல்லி: 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் மத்திய அரசு இறங்கியுள்ளது. பட்ஜெட் சார்ந்து ஒவ்வொரு துறையினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபைகளின் சங்கம் (அசோசெம்), தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளது.
தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.