

மூலப்பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் வாகனங்களின் தகுதியை உயர்த்துவது (பிஎஸ்-4) ஆகிய காரணங்களால் பஜாஜ் ஆட்டோ வின் இரு சக்கர வாகனங்களின் விலையை ரூ.1,500 வரை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்திருக் கிறது.
இது குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவு தலைவர் எரிக் வாஸ் கூறிய தாவது: அனைத்து இரு சக்கர வாகனங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ் 4 தகுதிசான்று பெற்றிருக்க வேண்டும். தகுதியை உயர்த்தும் முதல் நிறுவனமாக நாங்கள் இருப்போம். ஏற்கெனவே எங்களுடைய சில வாகனங்கள் பிஎஸ் 4 தகுதி சான்று பெற்றவை யாகும். இதன் காரணமாக எங்க ளுடைய அனைத்து வாகனங்களின் விலையையும் ரூ.700 முதல் 1,500 வரை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இந்த விலை உயர்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டோமினர் 400 வாகனத்துக்கு பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
தற்போது தயாராகும் இரு சக்கர வாகனங்கள் பிஎஸ் 3 தகுதியுடன் இருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் முதல் புதிதாக அறிமுகம் செய்யப்படும் மாடல்கள் அனைத்தும் பிஎஸ் 4 தகுதி சான்றிதழ் பெற வேண்டும். ஏற்கெனவே இருக்கும் மாடல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 4 தகுதி சான்று பெற வேண்டும்.
ஏற்கெனவே ஹூண்டாய், நிஸான், ரெனால்ட், டொயோடா, ஆகிய நிறுவனங்கள் வாகனங் களின் விலையை வரும் ஜனவரி முதல் உயர்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.