

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் புதன்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்து 62,748 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு அடைந்து 18,650 ஆக இருந்தது.
புதன்கிழமை காலை 09:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.53 புள்ளிகள் உயர்வுடன் 62,782.83 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.30 புள்ளிகள் உயர்வடைந்து 18,654.30 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் வலுவான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று ஏற்றத்துடனேயே தொடங்கியது. அனைத்து வகையான பங்குகளும் ஏற்றம் அடைந்திருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை விப்ரோ, எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல்ஸ்,ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், ஹெச்எஃப்டி, நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன.