

உலக அளவில் பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், சர்வதேச அளவில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன் அடிப்படையில், ‘வர்த்தகம் 20’ (Business 20) என்ற பெயரில் வர்த்தக அலுவல் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக அலுவல் குழுவானது உலக வர்த்தகம், தன்னிறைவு பெறுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கொள்கைகளை விவாதிக் கும் தளமாக செயல்பட்டு, அக்கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உதவும்.
ஜி20 உச்சிமாநாட்டுக்கான தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருக்கிறது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம்,ஒரே எதிர்காலம்’ என்பதை 2023-ம்ஆண்டுக்கான ஜி-20 உச்சிமாநாட்டின் கருப்பொருளாக பிரதமர்மோடி முன்வைத்துள்ளார். இந்தக்கருப்பொருளின் அடிப்படையில் இந்த உச்சிமாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகள் மற்றும்டிஜிட்டல்மயமாக்குதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு உறுதுணையாக இருக்கும் நோக்கிலேயே ‘வர்த்தகம் 20’ அலுவல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுவில், இந்திய தொழில்கூட்டமைப்பு (சிஐஐ) முக்கியப் பங்காற்றுகிறது. இந்த வர்த்தக அலுவல் குழுவானது, உலகளாவிய பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்படும். ஆப்பிரிக்க நாட்டுச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுதல் போன்ற வர்த்தக உறவை ஏற்படுத்தும் பணிகளில் இக்குழு ஈடுபடும்.
மேலும் நிதி ஆதாரம் மற்றும்உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்றதுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படும். நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி புத்தாக்க நடவடிக்கைகளுக்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த முயற்சிகளால் எரிசக்தி, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளும் மேம்பாடு அடையும். நமது தொழில் முனையும் திறன், புத்தாக்கச் சிந்தனை,சமூகச் பொறுப்பு மூலம் உலகஅளவில் நமது ஆற்றலை வெளிப் படுத்தும் தளமாக ‘வர்த்தகம் 20’ இருக்கும்.
உலக வர்த்தகம், டிஜிட்டல்மயமாக்குதல் தொடர்பான கொள்கைகளை விவாதிக்கும் தளமாக செயல்பட்டு, அதன் மூலம் அக்கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வர்த்தகம் 20’ உதவும்.