

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி யடைவதைக் கருத்தில்கொண்டு வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக பெடரல் ரிசர்வ் தலைவர் ஜேனட் யெலன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவது இதுவே முதல் முறையாகும். வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் பொருள் களின் விலையை ஸ்திரமாக வைப் பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை யால் வேலை வாய்ப்பு உருவா கும், பணவீக்கம் 2 சதவீத அள வுக்கு இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கை ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யெலன் தெரிவித்தார். தங்களது கணிப்பு நிச்சயம் மெய்ப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி உயர்த்தப்பட்டது.
தற்போது அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வட் டியை உயர்த்துமாறு பரிந்துரைத் தாரா என்று கேட்டதற்கு அது குறித்து விவாதிக்கப்பட்டது என்று யெலன் பதிலளித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது ஒபாமா நிர்வாகத்துக்கு ஆதரவாக வட்டி விகிதத்தை ஜேனட் யெலன் உயர்த்தவில்லை என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன கரன்சி சரிவு
பெடரல் ரிசர்வ் வட்டி உயர்த்தப்பட்டதன் விளைவாக டாலருக்கு நிகரான சீனாவின் ரெமின்பி மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. சீனாவின் ரெமின்பி அல்லது யுவானின் மதிப்பு 6.92 ஆக இருந்தது. இதேபோல சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 0.73 சதவீதம் சரிந்தது. ஷென்சென் குறியீடு 0.23 சதவீதம் சரிந்தது.