வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு சேவை வழங்க பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வணிக ஒப்பந்தம்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன மேலாண் இயக்குநரும், சிஇஓ-வுமான தருண் சுக் ஆகியோர் வணிக ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன மேலாண் இயக்குநரும், சிஇஓ-வுமான தருண் சுக் ஆகியோர் வணிக ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
Updated on
1 min read

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிறுவனம், தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கியாகும். இது தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னிறுத்தி, வங்கியில் அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், மெர்கன்டைல் வங்கி புதிதாக வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.வணிக ஒப்பந்த தொடக்க விழாவில், வங்கியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கிக் கிளைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணியில் வங்கி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதையொட்டி, கூடுதலாக பல்வேறு சேவைகள் மற்றும் புதிய திட்டங்களை வழங்கும் பணியில் வங்கி ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், புதிதாக வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது ஒரு மகத்தான நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மெர்கன்டைல் வங்கிக்கு நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவகங்கள் உள்ளன. சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிறைவான சேவைபுரிந்து வருகிறது.கூடுதல் விவரங்களை www.tmb.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியாவின் தலைசிறந்த தனியார் ஆயூள் காப்பீட்டு நிறுவங்களில் ஒன்றாகும். இந்தியாவின் வங்கி சாராத நிதி நிறுவனமான பஜாஜ் நிதிசேவை நிறுவனம் மற்றும் உலகின் முன்னோடி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான அலையன்ஸ் எஸ்.இ. ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செயல்படும் நிறுவனமாகும்.கூடுதல் விவரங்களை www.bajajallianz.com என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in