

நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது.
அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.