

$ சீமென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். சீமென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்தியர் இவர்தான்.
$ பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டம் படித்தவர். சார்ட்டட் அக்கவுண்டண்டும் முடித்தவர்.
$ ஏ.எஃப். பெர்குஸன் நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்தார். அங்கு சீமென்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை உள் தணிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு பிறகு சீமென்ஸ் நிறுவனமே இவருக்கு வேலை கொடுத்தது.
$ 26 வருடங்களாக சீமென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். 2008 ஜூலையில் தெற்கு ஆசியாவுக்கு தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
$ 2014, 2015-ம் ஆண்டுகளை விட 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.