டிசம்பரில் ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது

டிசம்பரில் ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது
Updated on
1 min read

நடப்பு டிசம்பர் மாதத்தில் இது வரை ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

டிசம்பர் 1 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,744 கோடி வெளி யேறி இருக்கிறது. இதே கால கட்டத்தில் இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.19,027 கோடி வெளியேறி இருக்கிறது. மொத்தம் ரூ.22,771 கோடி வெளியேறி உள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நிய முத லீடு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த ஆண்டில் இது வரை இந்திய பங்குச்சந்தையில் நிகர முதலீடு வந்திருக்கிறது. மாறாக இந்திய கடன் சந்தையில் அதிக தொகை வெளியேறி இருக்கிறது.

இதுவரை இந்திய பங்குச் சந்தைக்கு ரூ.24,998 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. மாறாக இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.43,737 கோடி வெளியேறி இருக்கிறது. இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறிய தொகையில் 92% நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேறி இருக்கிறது.

ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.44,928 கோடி சரிவு

சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.44,928 கோடி அளவுக்கு சரிந்திருக்கிறது. எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், கோல் இந்தியா மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்திருக்கிறது. மாறாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in