

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண் டாம் காலாண்டில் 7.3% வளர்ச்சியை எட்டியுள்ளது. செப்டம்பருடன் முடி வடைந்த காலாண்டில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறையில் காணப்பட்ட வளர்ச்சியே முக்கியக் காரணமாகும். மேலும் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வேளாண் துறையில் காணப்பட்ட நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. வேளாண் துறையில் முதல் காலாண்டில் 1.8 சதவீதமாக இருந்த வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 3.3 சதவீதமாக உயர்ந்ததும் முக்கிய காரணமாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவீத மாக இருந்தது. அத்துடன் ஒப்பிடு கையில் இரண்டாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட் டுள்ளது. ஆனால் முந்தைய நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி 7.6 சதவீதமாக இருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி சற்று குறைவாகும்.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி முதல் காலாண்டில் 9.1 சதவீத மாக இருந்தது. இரண்டாம் காலாண் டில் இது 7.1 சதவீதமாகக் குறைந் துள்ளது. சுரங்கத்துறை 1.5% குறைந் துள்ளது. கட்டுமானத்துறை 3.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. முதல் காலாண்டில் இத்துறை 1.5% வளர்ச்சியை மட்டுமே எட்டியிருந் தது. சேவைத்துறை, வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு துறைகளில் 7.1 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. நிதித்துறையில் 8.2 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் ராணுவத்துறை களில் 12.5 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை 79.3%
நடப்பு நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை முதல் 7 மாதத்தில் 79.3 சதவீதமாக உள்ளது. அதாவது நிதிப் பற்றாக்குறை கணிப்பு ரூ. 4.23 லட்சம் கோடியாகும். மொத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி நிதிப் பற்றாக்குறையின் அளவு முதல் 7 மாதங்களில் 79.3 சதவீதமாக உள்ளது.
முந்தைய நிதி ஆண்டில் இருந்த நிலைமையைக் காட்டிலும் தற்போது பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. கடந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை 74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையின்படி வரி வருவாய் ரூ. 5.30 லட்சம் கோடியாகும். பட்ஜெட் மதிப்பீட்டில் இது 50.3 சதவீமாகும். நடப்பு நிதி ஆண்டுக் கான வரி வருமானம் ரூ. 10,54,101 கோடி இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. கடன் அல்லாத மூலதனம் மூலமான வருமானம் கடந்த 7 மாதங்களில் ரூ. 7.27 லட்சம் கோடியாக உள்ளது.
இதே காலத்தில் அரசின் திட்டம் சார்ந்த செலவு ரூ. 3.41 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 62 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் அரசின் திட்டம் சார்ந்த செலவு 58.2 சதவீதமாக இருந்தது.
திட்டம் சாரா செலவு ரூ. 8.09 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட் மதிப்பீட்டில் 56.7 சதவீதமாகும்.
வருவாய் பற்றாக்குறை 7 மாதங்களில் ரூ. 3.27 லட்சம் கோடியாக அதாவது பட்ஜெட் மதிப்பீட்டில் 92.6 சதவீத அளவுக்கு உள்ளது.