

பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி தங்க நாணயங்களை விற்பனை செய்வதற்காக பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்பிஐ) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேத் பிரகாஷ் தெரிவித்தார்.
எம்எம்டிசி நிறுவனம் ஏற் கெனவே இதுபோன்று பல பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து இதுவரை ஒரு லட்சம் தங்க நாணயங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 5 லட்சம் நாணயங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
5 கிராம், 10 கிராம், 20 கிராம் அளவுகளில் தங்க நாணயங் களை எம்எம்டிசி வெளியிடு கிறது.