8 மாதங்களுக்கு பிறகு பவுன் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி

8 மாதங்களுக்கு பிறகு பவுன் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை 8 மாதங்களுக்கு பிறகு, ரூ.40 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் ஒரு பவுன்தங்கம் ரூ.40,160-க்கு விற்பனையானது. இதனால், பண்டிகைகள், திருமணத்துக்காக நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி, இறங்கி வருகிறது. சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,955-க்கும், ஒருபவுன் ரூ.39,640-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.65 என பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.5,020-க்கும்,ஒரு பவுன் ரூ.40,160-க்கும் விற்கப்பட்டது.

24 காரட் சுத்த தங்கம் விலைஒரு கிராம் ரூ.5,412, ஒரு பவுன்ரூ.43,296 என இருந்தது. அதேபோல, வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.71, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.71,000 என இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம்விலை ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், குறைந்து ரூ.37 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளும், தை மாத முகூர்த்த சீசனும் நெருங்கி வரும் நிலையில்தங்கம் விலை உயர்ந்திருப்பது, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in