கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் மின் நுகர்வு 14 சதவீதம் அதிகரிப்பு

கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் மின் நுகர்வு 14 சதவீதம் அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு புள்ளிவிவரத்தின்படி, நடப்பாண்டு நவம்பரில் நாட்டில் மின்சார பயன்பாடு 13.6 சதவீதம் அதிகரித்து 112.81 பில்லியன் யூனிட்டுகளை எட்டியது.

பொதுவாக நவம்பரில் மின்பயன்பாடு குறைவாகவேஇருக்கும். ஆனால், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதை அடுத்து நவம்பரில் இரட்டை இலக்க அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பரில் மின்சார பயன்பாட்டின் அளவானது 99.32 பில்லியன் யூனிட்டுகளாகவே இருந்தது. இருப்பினும் இது, 2020 நவம்பரில் காணப்பட்ட 96.88பில்லியன் யூனிட் மின்சாரத்தை காட்டிலும் அதிகம்.

கடந்த மாதத்தில் ஒரு நாளுக்கான உச்சபட்ச மின்தேவையானது 186.89 ஜிகாவாட்டை எட்டியது. இது,2021 நவம்பரில் 166.10 ஜிகாவாட்டாகவும், 2020 நவம்பரில் 160.77 ஜிகா வாட்டாகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கடும்குளிர் நிலவுவதால் வெப்பமூட்டும் உபகரணங்களுக்கான தேவை அதிகரிப்பதால் வரும் மாதங்களில் மின்சாரத்துக்கான தேவை மற்றும் அதன்பயன்பாடு கணிசமான வகையில் உயரக்கூடும் என இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in