

காலணிகளுக்கான உற்பத்தி வரியில் 10 சதவீதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் காலணி நிறுவன பங்குகளின் மதிப்பு வெகுவாக உயர்ந்தன.
மக்களவையில் இன்று 2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில், காலணிகள் உற்பத்தி வரியில் 16-ல் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதனால், பங்குச்சந்தையில் காலணி நிறுவன பங்குகளை வாங்குவதில் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டினர். இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தையில் ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ் பங்குகள் 9.74 சதவீதமும், லிபர்டி ஷூஸ் பங்குகள் 8.50 சதவீதமும் உயர்ந்தன.
இதைப்போலவே, மிர்ஸா இன்டர்நேஷனல் லிமிடட் பங்குகள் 8.35 சதவீதம், பாட்டா இந்தியா பங்குகள் 4.50 சதவீதம் உயர்ந்தன.
உற்பத்தி வரி குறைப்பின் எதிரொலியாக, ரூ.1000 மதிப்பு வரையிலான காலணி ஜோடிகளின் விலை குறையும்.