Published : 19 Dec 2016 09:42 AM
Last Updated : 19 Dec 2016 09:42 AM

ரூ.5.5 லட்சம் கோடி புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

இதுவரை ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. விரைவில் மேலும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

இதுவரை ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டு கள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன. அதற்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வாரத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது என்று செய்தி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. இதில் 35.6 சதவீத பணம் மட்டுமே சந்தையில் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூடுதலாக 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ரூ.2,000 நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகளை மக்களால் செலவு செய்ய முடியவில்லை பணப்புழக்கத்துக்கு பயன்படவில்லை என்பதால் 500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு செய்தோம்.

மொத்த உற்பத்தி திறனில் 90 சதவீதம் 500 ரூபாய் நோட்டு களை அச்சடிப்பதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. அடுத்த ஒரிரு வாரங் களில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிக்கும். இதை தவிர 10,20,50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பொது வாக ஒரு வருடத்தில் புழக்கத்தில் விடுவதைவிட மூன்று மடங்குக்கு சிறிய மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

பணம் தேவைப்படும் கூட்டுறவு வங்கிகள் குறித்து நபார்டு நிர்வாகத் துடன் மத்திய நிதி அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. 360 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் பட்டியலை நபார்ட் வழங்கி இருக்கிறது. இந்த பட்டியல் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கவேண்டிய சூழலை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது என்று சக்தி காந்ததாஸ் குறிப் பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x