

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) தலைவராக வி.கே.சர்மா ஐந்து ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தற்போது பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய தலைவர் எஸ்.கே.ராய் ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இரு ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கும் போதே எஸ்.கே.ராய் ராஜினாமா செய்தார்.
வி.கே.சர்மா கடந்த 2013-ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்கு நராக இருக்கிறார். 1981-ம் ஆண்டு எல்.ஐ.சியில் சேர்ந்த இவருக்கு மாத சம்பளமாக 80,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊதியம் மாறுதலுக்கு உட்பட்டது என எல்ஐசி தெரிவித்திருக்கிறது.